பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் சிமோனா ஹாலேப்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 11:09 am
simona-halep-enters-into-third-french-open-final

பிரெஞ்சு ஓபன் போட்டியில் தனது மூன்றாவது இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப். 

பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியில், ஹாலேப் - கார்பின் முகுருசா, மகளிர் அரையிறுதி பிரிவில் போட்டியிட்டனர். 92 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஹாலேப் 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தினார். இதன் மூலம், மூன்றாவது பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றை எட்டிய ஹாலேப், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி உள்ளார். 

மற்றொரு போட்டியில், யுஎஸ் சாம்பியன் ஸ்லோவானே ஸ்டீபன்ஸ் 6-4, 6-4 என மேடிசன் கீஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் இறுதி ஆட்டத்தில் ஹாலேப் - ஸ்டீபன்ஸ் மோதுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close