11 பிரெஞ்சு ஓபன் கோப்பையை நோக்கி ரஃபேல் நடால்

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 12:11 pm
rafael-nadal-cruises-into-11th-french-open-final

உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பானின் ரஃபேல் நடால், தனது 11-வது பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், நடால் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 10 முறை பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நடால், 11-வது கோப்பைக்காக, நாளை ஆஸ்திரியாவின் டொமினிக் தியமுடன் மோதுகிறார். 

16 பிரதான போட்டிகளின் பட்டங்களை கைப்பற்றியுள்ள நடாலுக்கு, இது 24-வது கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டியாகும். இறுதி ஆட்டத்தில் தியமை, நடால் முதல் முறையாக எதிர்கொள்கிறார். இருவரும் 9 முறை மோதி உள்ளன. அந்த அனைத்து போட்டிகளும் களிமண் தரையில் நடந்தவை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close