பிரேசிலின் டென்னிஸ் குயின் மரியா புவேனோ காலமானார்

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 12:41 pm
brazil-tennis-queen-maria-bueno-dies-at-78

பிரேசிலின் டென்னிஸ் குயின் மரியா புவேனோ, ஸோ போலோ என்னும் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் இயற்கை எய்தினார். கடந்த ஆண்டு வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மே மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

78 வயதான மரியா, மூன்று விம்பிள்டன், நான்கு யுஎஸ் சாம்பியன்ஷிப் சிங்கிள்ஸ் டைட்டிலை வென்றுள்ளார். முறையான பயிற்சி எடுக்காத மரியா, 1958ம் ஆண்டு இத்தாலியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அனைவரது கவனத்தையும் பெற்றார். அப்போட்டியில் சிறந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போட்டியாளர்களை வீழ்த்தினார். அதே ஆண்டு விம்பிள்டன் இரட்டையர் பிரிவு பட்டத்தை கைப்பற்றினார்.

அவர் ஒரு முறை, "நான் யாருக்கு எதிராக விளையாடுகிறேனோ, அவர்களை அனைவரையும் கண்டு பயப்படுவேன்" என்று கூறி இருந்தார்.  

இவருடைய இறப்புக்கு பிரேசில் நாட்டு பிரதமர் உளப்பட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. பிரேசில் பிரதமர் மிச்செல் டெமெர், "பிரேசில் நாட்டு மக்களின் நினைவுகளில் என்றென்றும் டென்னிஸ் நம்பர் ஒன் வீராங்கனை மரியா வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்" என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

1968ம் ஆண்டு யுஎஸ் ஓபன் இரட்டையர் பட்டத்தை, ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லெஜெண்ட் மார்கரெட் கோர்ட்டுடன் சேர்ந்து பெற்றார். 1965ம் ஆண்டும் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். 

ஓய்வுக்கு பிறகு மரியா, பிரேசிலின் ஸ்போர்டிவி-ல் வர்ணனையாளராக பணியாற்றினார். 

1959, 1960, 1964, 1966 ஆகிய ஆண்டுகளிலும் டென்னிஸ் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்த மரியா, 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். 

1959, 1960 மற்றும் 1964-ல் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு பட்டங்கள், 1959, 1963, 1964, 1966 ஆகிய ஆண்டுகளில் யுஎஸ் ஓபன் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். இது தவிர, 1964ல் பிரெஞ்சு சாம்பியன்ஷிப் மற்றும் 1965 ஆஸ்திரேலியா சாம்பியன்ஷிப்பிலும் வெற்றி கண்டுள்ளார்.

எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிரித்த முகத்துடன் காணப்படும் மரியா, நோய் தாக்கம் ஏற்படும் வரை டென்னிஸ் விளையாடுவதை விடவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close