பிரெஞ்ச் ஓபன்: 9 ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு கோப்பையை வென்ற ஹாலப்

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 11:29 am
9-years-wait-is-over-for-simona-halep-wins-french-open-fo-the-first-time

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக  பட்டத்தை வென்றுள்ளார் சிமோனா ஹாலப்.

கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் பாரிசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீப்ன்ஸ் மற்றும் ருமேனியாவின் சிமோனா ஹாலப் மோதினர். இதில் சிமோனா ஹாலப் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஹாலப் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாட தொடங்கி 9 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இது தான் அவர் வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். தற்போது உலகில் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ள ஹாலப் 4 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதில் 3 முறை பிரெஞ்ச் ஓபன் போட்டிகள். இந்தாண்டு செரினா, மரியா ஷரபோவா ஆகியோர் விளையாடிய போதும் ஹாலப் வென்றுள்ளார்.

இதுகுறித்து ஹாலப் கூறும் போது, “40 ஆண்டுகளுக்கு பிறகு ருமேனியாவிற்காக பட்டம் வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதே தொடரில் மீண்டும் வந்து வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இது மிகவும் உணர்ச்சிவசமான தருணம். நான் 14 வயதில் இருந்து இதற்காக தான் காத்திருந்தேன்” என்றார்.  

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close