நம்பர் ஒன் நடால் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 11:33 am
french-open-champion-rafael-nadal-unsure-of-wimbledon-appearance

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில், நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

பாரிஸில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில், 11-வது முறையாக கோப்பையை வென்று நடால் சாதனை படைத்தார். இதனுடன் மொத்தம் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் நடால். இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் விம்பிள்டன் போட்டியில் நடால் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து நடால் கூறுகையில், "அது பற்றி இப்போது நான் சிந்திப்பது மிகவும் கடினமானது. நீண்ட நாட்கள் மற்றும் கடினமான களிமண் தரை சீசனை எதிர்கொண்டுள்ளேன். ஏனெனில், காயத்தில் இருந்து மீண்டு வந்து அனைத்து போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன்" என்றார். 

பிரெஞ்சு கோப்பையை தவிர நடால் இந்த ஆண்டு, மான்டி கார்லோ, பார்சிலோனா, ரோம் ஆகிய சாம்பியன் பட்டங்களையும் வென்றார். இன்னும் சில நாட்களில் குயின்ஸ் கிளப் போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்வது குறித்து தனது அணி மற்றும் பயிற்சியாளருடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக நடால் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close