ஸ்டட்கார்ட் ஓபன் பட்டத்தை கைப்பற்றி, நம்பர் 1 இடத்தை பிடித்தார் பெடரர்

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 08:01 pm
roger-federer-claims-his-98th-career-title-in-stuttgart-marks-no-1-ranking

ஸ்டட்கார்ட் ஓபன் சாம்பியன் பட்டம் வென்று நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பெற்றார் ரோஜர் பெடரர். 

ஜெர்மனியில் நடைபெற்று வந்த ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ஸ்விட்சர்லாந்தின் பெடரர்,   கனடாவின் மிலோஸ் ரோனிக்கை எதிர்கொண்டார். 78 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் பெடரர் 6-4, 7-6(3) என்ற கணக்கில் ரோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெடரர் பெறும் 98-வது டூர் லெவல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இதன் மூலம், தரவரிசையில் ஸ்பெயினின் நடாலை பின்னுக்கு தள்ளி, மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பெடரர்.

பிரெஞ்சு ஓபனில் பங்கேற்காத பெடரர், 11 வாரங்களுக்கு பிறகு இப்போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றுள்ளார். இதன் பிறகு நடக்க இருக்கும் ஹாலே க்ராஸ்கோர்ட் போட்டி பட்டத்துக்காக முனைப்பு காட்டும் பட்சத்தில், விம்பிள்டனில் தனது 100-வது பட்டத்தை கைப்பற்ற பெடரர் முயற்சிப்பார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close