799-வது வெற்றியை பதிவு செய்தார் நோவக் ஜோகோவிச்

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 09:35 am
novak-djokovic-registered-his-win-no-799

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

லண்டனின் கென்சிங்டன் நகரில் புல் தரையில் நடக்கும் போட்டியான குயின்ஸ் கிளப் டென்னிஸ் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தரவரிசையில் 22ம் இடம் வகிக்கும், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தனது 799-வது கரியர் வெற்றியை பதிவு செய்தார். 

பல்கேரியாவின் க்ரிகோர் டிமிட்ரோவை, 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டியில் வெற்றி பெற அவருக்கு 65 நிமிடங்கள் மட்டுமே தேவையாக இருந்தது. 

வெற்றிக்கு பின் ஜோகோவிச், "800-வது வெற்றியை பெறுவேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அவ்வாறு வெற்றி அடையும் பட்சத்தில், 800 வெற்றி என்னும் கிளப்பில் 10-வது வீரராக ஜோகோவிச் இணைவார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close