விம்பிள்டன்: துவக்க போட்டியில் ஷரபோவா வெளியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 09:28 am
maria-sharapova-out-of-wimbledon-open

விம்பிள்டன் ஓபன் துவக்க போட்டியில் இருந்து ரஷ்யாவின் மரியா ஷரபோவா வெளியேற்றப்பட்டார். 

லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சக நாட்டைச் சேர்ந்த விடாலியா டைட்ச்செங்கோவை துவக்க போட்டியில் எதிர்கொண்டார். 

24-வது இடம் வகிக்கும் ஷரபோவாவை, 6-7(3) 7-6(3) 6-4 என்ற கணக்கில் 174 இடத்தில் இருக்கும் டைட்ச்செங்கோ வென்றார். டை-பிரேக்கர் வரை சென்ற இப்போட்டியில் ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் டை-பிரேக்கர் வரை சென்ற ஆட்டத்தில் 5 முறை ஷரபோவா வெற்றியை கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஷரபோவா, துவக்க போட்டியிலேயே தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close