விம்பிள்டன்: நம்பர் ஒன் ரஃபேல் நடால் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 09:57 am
rafael-nadal-wins-in-wimbledon-opener

விம்பிள்டன் ஓபன் துவக்க போட்டியில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார். 

லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இஸ்ரேலின் டுடி சேலவை எதிர்கொண்டார். 

11-வது பிரெஞ்சு ஓபன் டைட்டிலை வென்ற பிறகு, நடால் சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும். 2008 மற்றும் 2010ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நடால், 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சேலவை தோற்கடித்தார். அடுத்த போட்டியில் நடால், கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கினுடன் மோதுகிறார். 

ஆடவர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில், நிக் கிர்ஜியோஸ், கெய் நிஷிகோரி, டெல் போட்ரோ, போக்னினி ஆகியோரும் துவக்க போட்டியில் வெற்றி கண்டனர். 

மகளிர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் குறுமி நாராவை வீழ்த்தினார். இரண்டவாவது சுற்று போட்டியில் ஹாலேப், சீனாவின் செங் சைஸையை சந்திக்கிறார். 

மற்ற போட்டிகளில், ஒஸ்டாபென்கோ, கெர்பர், முகுருசா, பௌசர்ட், கொன்டா உள்ளிட்டோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close