ஏடிபி டென்னிஸ்: காலிறுதியில் பயஸ் தோல்வி, ஷரன் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 11:52 am
leander-paes-knocks-out-from-atp-hall-of-fame-open

ஏடிபி டென்னிஸ் காலிறுதி போட்டியில் லியாண்டர் பயஸ் தோல்வி அடைந்துள்ளார். 

நியூபோர்ட்டில் ஏடிபி ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. களிமண் தரை மற்றும் புல் தரை சீசன் போட்டிகளை முற்றிலும் புறக்கணித்த இந்தியாவின் லியாண்டர் பயஸ், இப்போட்டியில் பங்கேற்றார். 

கடந்த பிப்ரவரி மாதம் டேவிஸ் கோப்பை போட்டியில் சாதனை படைத்துவிட்டு, தனது முதல் போட்டியை அமெரிக்காவின் ஜேமி ஸ்ரரேட்டனியுடன் எதிர்கொண்ட பயஸ், லுக் பாம்பிரிட்ஜ் - ஜானி ஓ' மாரா இணையை 6-4, 6-3 என வீழ்த்தினார்.

இதன் பின், நடந்த காலிறுதி போட்டியில் பயஸ் - ஸ்ரரேட்டனி இணை, 3-6, 6-7 என ஜீவன் நெடுஞ்செழியன் - ஆஸ்டின் கிரெஜிஸ்க் கூட்டணியிடம் தோல்வி கண்டது. 

மற்ற காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் டிவிஜ் ஷரன் - அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ கூட்டணி காலிறுதியில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்திய வீரர் புராவ் ராஜா - அமெரிக்காவின் கென் சுகுப்ஸ்கி இணை காலிறுதியில் தோல்வி அடைந்து, வெளியேறியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close