முதல் ஏடிபி அரையிறுதிப் போட்டியில் ராம்குமார் ராமநாதன்

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 06:28 pm
ramkumar-ramanathan-enters-into-his-first-atp-semi-finals

ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் அரையிறுதிப் போட்டிக்கு ராம்குமார் ராமநாதன் முன்னேறியுள்ளார். 

ரோட் தீவுகள் நியுபோர்ட்டில் ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் காலிறுதி போட்டியில், 161-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார் 7-5, 6-2 என்ற கணக்கில் கனடாவின் வஸேக் பொஸ்பிசிலை தோற்கடித்தார். 

ஏடிபி போட்டியில் அரையிறுதிக்கு ராம்குமார் முன்னேறுவது இது முதல்முறை ஆகும். அரையிறுதியில் அமெரிக்காவின் டிம் சம்யக்ஸிக்கை எதிர்கொள்கிறார் ராம்குமார். 

முன்னதாக இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீரர் லியாண்டர் பயஸ் தோல்வி அடைந்து வெளியேறியிருந்தார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close