முதல் ஏடிபி டூர் போட்டியில் ராம்குமார் ராமநாதன் ரன்னர்-அப்

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 04:00 pm
ramkumar-ramanathan-finishes-runner-up-in-his-first-atp-tour-final

ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ராம்குமார் ராமநாதன் தோல்வி அடைந்தார். 

ரோட் தீவில் உள்ள நியூபோர்ட்டில் ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ராம்குமார் ராமன்தான், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனுடன் மோதினார். ராம்குமாரின் முதல் ஏடிபி உலக டூர் இறுதிச் சுற்று போட்டி இதுவாகும். 2011ம் ஆண்டு இந்தியாவின் சோம்தேவ் தேவர்மனுக்கு பிறகு, ஏடிபி உலக டூர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் முதல் இந்திய வீரர் ராம்குமார் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், ராம்குமாரை 7-5, 3-6, 6-2 என்ற கணக்கில் வென்று, ஜான்சன் கோப்பையை கைப்பற்றினார். இதன் மூலம், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஏடிபி பட்டத்தை கைப்பற்றும் முதல் இந்தியர் என்ற சாதனையை படைக்க ராம்குமார் தவறியுள்ளார். 1998ம் ஆண்டு லியாண்டர் பயஸ், இப்படத்தை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close