ரோஜர்ஸ் கோப்பை போட்டியில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 03:18 pm
roger-federer-pulls-out-of-toronto-s-rogers-cup

ரோஜர்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் இருந்து நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் விலகினார். 

டொரோண்டோவில் அடுத்த மாதம் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இத்தொடரில் இருந்து உலக தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் ஸ்விட்சர்லாந்தின் பெடரர் விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், தனது அட்டவணையை எளிதாக்கவும், பெரிய போட்டிகளில் பங்கேற்பதற்காக வலிமையை பலப்படுத்திக் கொள்ளவும் பெடரர் முடிவு செய்துள்ளார். 

இரண்டு வாரத்திற்கு முன், விம்பிள்டன் ஓபன் காலிறுதிப் போட்டியில் பெடரர் தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டு மாண்ட்ரீலில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவிடம், கோப்பையை இழந்திருந்தார் பெடரர்.

போட்டியில் பங்கேற்காதது குறித்து பெடரர், "இந்த தொடர் வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள். தொடரில் பங்கேற்காததற்கு என்னை மன்னித்து விடுங்கள்" என்று தெரிவித்தார். 

ஆகஸ்ட் 4-12 நடக்கும் ரோஜர்ஸ் கோப்பை போட்டியில், ஏடிபி உலக டூர் டாப் 10ல் இடம் பிடித்திருக்கும் போட்டியாளர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். நம்பர் ஒன் வீரர் மற்றும் மூன்று முறை சாம்பியனான ரஃபேல் நடால், விம்பிள்டன் சாம்பியன் மற்றும் நான்கு முறை வெற்றியாளரான நோவக் ஜோகோவிச்சும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close