யுஎஸ் ஓபன் போட்டிக்கு முன் இரு தொடர்களில் பங்கேற்கும் செரீனா வில்லியம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 12:06 pm
serena-williams-to-play-in-two-events-before-us-open

யுஎஸ் ஓபன் போட்டிக்கு முன்பாக இரண்டு டென்னிஸ் தொடர்களில் பங்கேற்க இருக்கிறார் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வில்லியம்ஸ், ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை கலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் நடக்க இருக்கும் முபாடாலா சிலிகான் வேலி கிளாசிக் போட்டியில் பங்கேற்கிறார். 

ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்க இருக்கும் ரோஜர்ஸ் கோப்பை தொடரில், வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் போட்டியில் வில்லியம்ஸ் கலந்து கொள்கிறார். 

விம்பிள்டன் போட்டிக்கு பின், தரவரிசையில் 181-வது இடத்தில் இருந்து 28-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டார். பேறுகாலத்திற்கு பிறகு, இந்த ஆண்டு நான்கு தொடர்களில் வில்லியம்ஸ் விளையாடியுள்ளார். 

யுஎஸ் ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோஜர்ஸ் கோப்பை போட்டி நடைபெறுகிறது. இதில்  கடந்த 2014ம் ஆண்டு வில்லியம்ஸ் விளையாடி இருந்தார். டொரன்டோவில் இப்போட்டி நடக்கும் போது, மூன்று முறை டைட்டிலை வில்லியம்ஸ் கைப்பற்றியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close