அமெரிக்கர்களின் எலைட் கிளப்பில் இணைந்த ஜான் இஸ்னர்

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 12:48 pm
john-isner-joins-americans-elite-club

அட்லாண்டா ஓபன் சாம்பியன் டைட்டிலை 5-வது முறையாக கைப்பற்றி அமெரிக்கன் எலைட் கிளப்பில் இணைந்தார் ஜான் இஸ்னர். 

அமெரிக்காவில் நடைபெற்ற அட்லாண்டா ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்று போட்டியில், ஜான் இஸ்னர் 5-7, 6-3, 6-4 என்ற கணக்கில் ரியான் ஹாரிசனை வென்றார். இதன் மூலம், 5-வது முறையாக அட்லாண்டா ஓபன் சாம்பியன் டைட்டிலை கைப்பற்றினார். தவிர, ஜான் இஸ்னரின் 14-வது சாம்பியன் டைட்டில் இதுவாகும்.  மேலும், ஐந்து முறை அட்லாண்டா ஓபன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட அமெரிக்கர்கள் பட்டியலில் இணைந்தார். 

ஜிம்மி கான்னர்ஸ், ஜான் மெக்கென்றோ, பெட் சாம்ப்ராஸ், ஆண்ட்ரே அகஸ்ஸி ஆகியோர் 5 முறை அட்லாண்டா ஓபன் பட்டத்தை கைப்பற்றிய முதல் நான்கு அமெரிக்கர்களாவர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close