சான் ஜோஸ் டென்னிஸ்: துவக்க போட்டியிலேயே தோல்வி அடைந்த செரீனா வில்லியம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 04:23 pm
serena-williams-beaten-by-konta-in-san-jose-s-first-round

சான் ஜோஸ் டென்னிஸ் துவக்க போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். டென்னிஸ் வரலாற்றில் செரினாவின் மோசமான தோல்வியாக இது பார்க்கப்படுகிறது. 

லாஸ் ஏஞ்சல்சில், டபிள்யு.டி.ஏ சான் ஜோஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், செரீனா வில்லியம்சை 6-1, 6-0 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோஹன்னா கொன்டா, 51 நிமிடத்தில் வீழ்த்தினார். அடுத்த போட்டியில் கொன்டா, சோஃபியா கெனினுடன் மோதுகிறார்.

விம்பிள்டன் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த பிறகு செரீனாவின் முதல் போட்டி இதுவாகும். 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனாவின் டென்னிஸ் வரலாற்றிலேயே மிகவும் மோசமான தோல்வி இதுவே. 

சான் ஜோஸ் சாம்பியன் பட்டத்தை செரீனா (2011, 2012, 2014) மூன்று முறை வென்றுள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close