டொரண்டோ மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் நடால், ஜோகோவிச்

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2018 06:51 pm
djokovic-nadal-enter-3rd-round-of-toronto-masters

டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர். 

டொரண்டோவில் கனடா ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், 9ம் இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 121ம் இடத்தில் இருக்கும் பீட்டர் பொலன்ஸ்கியை வீழ்த்தினார். நாளை நடக்கும் மூன்றாவது சுற்றில் ஜோகோவிச், கிரீக் வீரர் ஸ்டெபானோஸை எதிர்கொள்கிறார். 

மற்றொரு போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் நடால், 6-2 6-3 என்ற நேர்செட்களில் பிரெஞ்சு வீரர் பெனாய்ட் பைரேவை தோற்கடித்தார். 3-வது சுற்றில் நடால், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார். 

டெல் போட்ரோ காயம் காரணமாக இரண்டாவது சுற்றிலேயே, தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மகளிர் பிரிவில் 3-வது சுற்றுக்கு, மரியா ஷரபோவா, கரோலின் கார்சியா, எலினா ஸ்விடோலினா, அசரென்கா ஆகியோர் முன்னேறினர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close