கனடா ஓபன்: ஜோகோவிச் தோல்வி; காலிறுதியில் நடால்

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 12:37 pm
novak-djokovic-stunned-by-tsitsipas-nadal-enter-quaters-of-toronto-masters

விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் கிரீக்கின் ஸ்டெபானோஸ் ட்ஸிட்ஸிபாஸ்.  

டொரண்டோவில் கனடியன் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆடவர் பிரிவு 3-வது சுற்றில், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச்சை 6-3, 6-7 (5/7), 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் கிரீக்கின் ட்ஸிட்ஸிபாஸ். 

நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், 7-5, 7-6 (7-4) என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை தோற்கடித்தார். காலிறுதி போட்டியில் நடால், குரோவேஷியாவின் மாரின் சிலிக்குடன் மோதுகிறார். 

மற்ற காலிறுதி ஆட்டங்களில், கிரீக்கின் ட்ஸிட்ஸிபாஸ்- அலெக்ஸாண்டர் ஸ்வேரெவுடனும், டிமிட்ரோவ் - ஆண்டர்சனுடன் மோதுகின்றனர். 

மகளிர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப், கரோலின் கார்சியாவை காலிறுதியில் சந்திக்கிறார். எலினா ஸ்விடோலினா - எல்லிஸ் மெர்ட்டன்ஸ் மற்றொரு காலிறுதி போட்டியில் மோதுகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close