4-வது ரோஜர்ஸ் கோப்பையை வென்றார் நடால்!

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2018 12:28 pm
rafael-nadal-wins-fourth-rogers-cup-title

நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், 80-வது ஏடிபி உலக டூர் டைட்டிலை வென்றார்.

ரோஜர்ஸ் கோப்பைக்கான ஏடிபி டென்னிஸ் போட்டி டொரண்டோவில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் நடால் 6-2, 7-6 (4) என்ற கணக்கில் கிரீக்கின் ஸ்டெபானோஸ் ட்சிட்ஸிபஸை வென்றார். 

இந்த ஆண்டில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ள நடால், 4-வது ரோஜர்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளார். 20 வயதை நேற்று எட்டிய ட்சிட்ஸிபஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை உடைத்த நடால், 80-வது ஏடிபி உலக டூர் டைட்டிலை வென்றிருக்கிறார்.

2008ல் டொரண்டோ, 2005 மற்றும் 2013ல் மாண்ட்ரீலில் ரோஜர்ஸ் கோப்பையை நடால் கைப்பற்றி இருந்தார். 

வெற்றிக்கு பிறகு பேசிய நடால், "யுஎஸ் ஓபன் போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதால், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டோர்னமெண்ட்டில் நான் பங்கேற்பது சந்தேகம்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close