நம்பர் ஒன் ஹாலேப்பை வீழ்த்தி சின்சினாட்டி டைட்டிலை வென்றார் பெர்ட்டன்ஸ்

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 12:09 pm
bertens-defeated-no-1-halep-to-win-cincinnati-open-title

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலேப், சின்சினாட்டி ஓபன் டைட்டிலை கிகி பெர்ட்டன்ஸிடம் பறிகொடுத்தார். 

ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி ஓஹியோவில் நடைபெற்றது. நேற்று மகளிர் பிரிவில் நடந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் - 17ம் இடம் வகிக்கும் டச்சின் கிகி பெர்ட்டன்ஸை எதிர்கொண்டார். 2 மணி நேரப் போட்டியில் பெர்ட்டன்ஸ் 2-6, 7-6 (8-6), 6-2 என்ற கணக்கில் ஹாலேப்பை வீழ்த்தினார். 

மேலும், பெர்ட்டன்ஸ் 10-வது முறையாக இந்த சீசனில், டாப் 10 போட்டியாளர்களை தோற்கடித்தார். தவிர, 6-வது டபிள்யுடிஏ டைட்டிலையும் பெர்ட்டன்ஸ் கைப்பற்றினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close