ஏசியன் டென்னிஸ்: இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2018 12:25 pm
rohan-boppanna-divij-sharan-gets-6th-gold-for-india-in-asian-games

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போப்பண்ணா - டிவிஜ் ஷரன் தங்கப் பதக்கம் வென்றனர். 

18-வது ஆசிய விளையாட்டிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் ரோஹன் போப்பண்ணா - டிவிஜ் ஷரன் இணை 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக் - டெனிஸ் எவ்விசேயேவ் கூட்டணியை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. 

இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 6 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலத்துடன் 22 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close