யுஎஸ் ஓபன்: வாவ்ரிங்கா, நடால் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 03:59 pm
wawrinka-nadal-enter-2nd-round-in-us-open

முன்னாள் சாம்பியன் ஸ்டான் வாவ்ரிங்கா, யுஎஸ் ஓபன் துவக்க போட்டியில் வெற்றி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு துவக்க ஆட்டத்தில், வாவ்ரிங்கா 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் பல்கேரியாவின் க்ரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் வாவ்ரிங்கா, பிரான்சின் யுகோ ஹம்பேர்ட்டை எதிர்கொள்கிறார். 

மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில், நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், சக நாட்டைச் சேர்ந்த டேவிட் பெடரருடன் மோதினார். இதில், 6-3, 3-4 என்ற கணக்கில் போட்டி நடந்து கொண்டிருந்த போது, பெடரர் ரிட்டையர்டு ஆனார். காயம் காரணமாக பாதியிலேயே பெடரர் விலகியதால் நடால், 2-வது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சுற்றில், கனடாவின் வஸேக் பாஸ்பிஸிலுடன், நடால் மோதுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close