யுஎஸ் ஓபன்: பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2018 11:48 am
federer-djokovic-enter-2nd-round-of-us-open

யுஎஸ் ஓபன் டென்னிஸ் துவக்க போட்டியில் ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றனர். 

நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை தோற்கடித்து, 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த போட்டியில் பெடரர், பிரான்சின் பெனாய்ட் பைரேவுடன் மோதுகிறார். 

மற்றொரு ஆட்டத்தில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 3-6, 6-4, 6-0 என ஹங்கேரியாவின் மார்டன் பியூசிசொவிச்ஸை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச், அமெரிக்காவின் டென்னிஸ் சண்டகிறேனை எதிர்கொள்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close