யுஎஸ் ஓபன்: காலிறுதிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2018 08:45 am
novak-djokovic-enter-quater-finals-of-us-open

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். 

நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் - போர்ச்சுகீஸின் ஜோயாவ் சௌசாவை எதிர்கொண்டார். 

68-வது இடம் வகிக்கும் சௌசாவை 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் 13 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டியில் ஜோகோவிச், ரோஜர் பெடரர் அல்லது ஜான் மில்மனை எதிர்கொள்வார். 

மற்றொரு ஆட்டத்தில், ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனின் பிலிப் கொஹ்லஸ்ச்ரேயபரை தோற்கடித்தார். காலிறுதியில் நிஷிகோரி, குரோஷியாவின் மரின் சிலிக்குடன் மோதுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close