யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி ஒசாகா, நிஷிகோரி சாதனை

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 03:18 pm
osaka-nishikori-first-duo-of-japan-to-enter-semis-in-us-open

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில், முதன்முறையாக ஜப்பானைச் சேர்ந்த போட்டியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 

நியூயார்க்கில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்த காலிறுதி ஆட்டங்களில், மகளிர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-1, 6-1 என்ற நேர்செட்களில் உக்ரைனின் லேசியா சுரென்கோவை தோற்கடித்தார். அரையிறுதியில் ஒசாகா, அமெரிக்காவின் மார்ட்டின் கீசுடன் மோதுகிறார்.

இதே போல் ஆடவர் பிரிவில், ஜப்பானின் கெய் நிஷிகோரி 2-6, 6-4, 7-6 (5), 4-6, 6-4 என குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தினார். அரையிறுதி ஆட்டத்தில் நிஷிகோரி, ஜோகோவிச்சுடன் மோத உள்ளார். 

ஜப்பானை சேர்ந்த போட்டியாளர்கள் இரு பிரிவிலும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை. இதன் மூலம் நிஷிகோரி, ஒசாகா சாதனை படைத்ததுடன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close