9-வது யுஎஸ் ஓபன் ஃபைனலில் செரினா வில்லியம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2018 11:38 am
serena-williams-enter-into-9th-us-open-final

அமெரிக்கா ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், 6 முறை சாம்பியனான செரினா - 19ம் இடம் வகிக்கும் லாத்வியாவின் அனஸ்தஸிஜா செவஸ்டோவாவை எதிர்கொண்டார். 

66 நிமிடம் நடந்த இப்போட்டியில் 17-வது இடத்தில் இருக்கும் செரினா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் செவஸ்டோவாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இதன் மூலம், 9-வது யுஎஸ் ஓபன் ஃபைனலுக்கு செரினா முன்னேறினார். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, 24-வது பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்க காத்திருக்கிறார். 
 
வரும் 9ம் தேதி நடக்க இருக்கும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் செரினா, ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதுகிறார். ஒசாகாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று ஆட்டம் இதுவாகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close