யுஎஸ் ஓபன்: நடால் விலகல்; ஃபைனலில் பொட்ரோ - ஜோகோவிச் மோதல்

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2018 12:37 pm
potro-djokovic-in-us-open-final-as-nadal-quits-with-knee-injury

யுஎஸ் ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் காயம் காரணமாக நம்பர் ஒன் ரஃபேல் நடால் விலகினார். இதனால் இறுதிப் போட்டியில் டெல் பொட்ரோ, நோவக் ஜோகோவிச்சுடன் மோத இருக்கிறார். 

நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இதில் ஆறு முறை சாம்பியனான ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை வென்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இது அவருடைய 8-வது யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டியாகும்.

மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரர் நடால் - 3ம் இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் பொட்ரோவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-7, 2-6 என்ற கணக்கில் இருந்த போது, முழங்கால் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே விலகினார். இதனால் பொட்ரோ இறுதிப் போட்டிக்குள் நுழைவதாக அறிவிக்கப்பட்டது. 

நாளை நடக்கும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் - பொட்ரோ மோத உள்ளனர். மகளிர் இறுதிச் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் - ஜப்பானின் நவோமி ஒசாகா மோதுகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close