யுஎஸ் ஓபன்: ஆடவர் இரட்டையரில் பிரையன் - சாக் இணை பட்டம் வென்றது

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2018 02:30 pm
mike-bryan-and-jack-sock-wins-us-open-doubles-title

அமெரிக்காவின் மைக் பிரையன் - ஜாக் சாக் இணை யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு பட்டத்தை கைப்பற்றியது. 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில், அமெரிக்க இணையான மைக் பிரையன் - ஜாக் சாக் - போலந்தின் லூகாஸ் குபோட் - பிரேசிலின் மார்செலோ மெலோ கூட்டணியுடன் மோதியது. 

இதில் லூகாஸ் குபோட் - மார்செலோ மெலோ ஜோடியை 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் மைக் பிரையன் - ஜாக் சாக் இணை வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

தொடர்ந்து இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய அமெரிக்க இணை என்ற பெருமையை பெற்றுள்ளனர் மைக் பிரையன் மற்றும் ஜாக் சாக். விம்பிள்டன் போட்டியிலும் அமெரிக்க இணை, இதே எதிரணியை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் மைக் பிரையனுக்கு இது 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன் மூலம், ஆல்-டைம் கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டம் பெற்ற வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஜான் நியூகொம்பேவை முந்தினார் பிரையன்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close