அமெரிக்க ஓபன்: செரினாவை வீழ்த்திய 20 வயது வீராங்கனை

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2018 10:33 am
naomi-osaka-beats-serena-williams-in-controversial-us-open-final

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்சை 20 வயதே ஆன ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.  

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினாவுடன், ஒசாகா மோதினார். 

விறுவிறுப்பான இப்போட்டியில் செரினாவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒசாகா எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஒசாகா வெல்வது இதுவே முதன்முறையாகும். 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள செரினா,ஒசாகாவிடம் இப்போட்டியில் தோல்வியடைந்தார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டத்தை செரினா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செரினாவை விட ஒசாகா 16 வயது இளையவர் ஆவார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close