தோற்றதால் விரக்தி! நடுவரை திருடன் என திட்டிய செரினா!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Sep, 2018 11:03 pm
serena-williams-heated-dispute-with-the-umpire-during-the-us-open-final

அமெரிக்க பொது விருது போட்டிகளின் இறுதிச்சுற்றில், போட்டியின் நடுவரைப் பார்த்து 'பொய் சொல்பவர்', ' திருடன்' என்று டென்னிஸ் வீராங்கனை அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நியூயார்க்கில் நேற்று  நடைபெற்ற அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டிகளின் இறுதிச்சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாக்கா செரினாவை வீழ்த்தி போட்டிகளில் வெற்றிவாகை சூடினார். இதையடுத்து பொது விருதில் வெற்றியடைந்த முதல் ஜப்பானியர் என்ற பெருமையை நவோமி பெற்றார். விளையாட்டில் சரியாக விளையாடாத ஏமாற்றத்தில் வில்லியம்ஸ் தன் கோபத்தை மைதானத்திலே வெளிப்படுத்தினார்.

அப்போது விளையாட்டின் பாதியில் பந்தாட்ட மட்டையைத் தரையில் எறிந்த அவர், போட்டியின் நடுவரைப் பார்த்து 'பொய் சொல்பவர்', ' திருடன்' என்று தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் பாலியல் ரீதியாக வேறுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். டென்னிஸ் விளையாட்டில் ஆண் வீரர்களைவிட வீராங்கனைகள் வேறுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர் என்றும் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close