ஏடிபி தரவரிசை: டாப் 3-க்கு ஜோகோவிச் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 11:59 am
novak-djokovic-claims-3rd-spot-in-atp-rankings

ஏடிபி தரவரிசைப் பட்டியலில் டாப் 3-க்குள் நுழைந்தார் நோவக் ஜோகோவிச். தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி முடிந்த நிலையில், புதிய ஏடிபி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யுஎஸ் ஓபன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச், மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை பிடித்தார். ஜோகோவிச்சிடம் தோல்வி கண்ட டெல் பொட்ரோ 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

யுஎஸ் ஓபன் நான்காவது சுற்றில் தோல்வி அடைந்த ஆண்டர்சன், 5-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு பின்தங்கினார். யுஎஸ் ஓபன் பிரதான சுற்றுக்கு முதன்முறையாக முன்னேறிய தென் ஆப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ், 14 இடங்கள் முன்னேறி 131-வது இடத்தை பிடித்துள்ளார். 

யுஎஸ் ஓபன் போட்டியில் தோற்கடிக்கப்பட்ட நடால், நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார்.  இதே போல், போட்டியின் பாதியிலேயே வெளியேறிய பெடரரும் 2-வது இடத்தில் தொடர்கிறார்.

டாப் 10 ஏடிபி தரவரிசைப் பட்டியல்:

1. ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 8,760

2. ரோஜர் பெடரர் (ஸ்விட்சர்லாந்து) 6,900

3. நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6,455

4. ஜுவான் மார்ட்டின் டெல் பொட்ரோ (அர்ஜென்டினா) 5,980

5. அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) 4,890

6. மரின் சிலிக் (குரோஷியா) 4,715

7. க்ரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 3,755

8. டொமினிக் தியம் (ஆஸ்திரியா) 3,665

9. கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) 3,595

10. ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 3,470

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close