பெடரர், ஸ்வெரெவ் அதிரடியில் ஐரோப்பிய அணி வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2018 01:54 pm
federer-zverev-earn-hard-fought-victory-to-seal-team-europe-laver-champions

அமெரிக்காவில் நடைபெற்று வரும் லாவர் டென்னிஸ் தொடரின் கடைசி நாளில், ஸ்விஸ் வீரரை ரோஜர் பெடரர் மற்றும் ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் வெற்றி பெற, உலக அணியை ஐரோப்பிய அணி வீழ்த்தியது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று வந்த லாவர் கோப்பையில், உலக டென்னிஸ் வீரர்களை ஐரோப்பிய டென்னிஸ் வீரர்களை கொண்ட அணி எதிர்கொண்டது. இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி நாளான நேற்று, நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இஸ்னரை பெடரர் 6-7(5), 7-6(8), 10-7 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். 

இதைத் தொடர்ந்து, கெவின் ஆண்டர்சனுடன், ஜெர்மன் வீரர் ஸ்வெரெவ் மோதினார். இந்த போட்டியிலும் இரு வீரர்களும் கட்சி வரை கடுமையாக போராடினர். இறுதியில் 6-7(3), 7-5, 10-7 என்ற செட் கணக்கில் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார். 

இந்த வெற்றியை தொடர்ந்து, 13-8 என்ற புள்ளிகள் கணக்கில் ஐரோப்பிய அணி வெற்றி பெற்ற கோப்பையை கைப்பற்றியது. "வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தேன். ஆனால், இவ்வளவு போராடி வெற்றி பெற போகிறோம் என நினைக்கவில்லை. இந்த மறக்க முடியாத தொடருக்கு சிகாகோ மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் பெடரர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close