8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ்: இன்று தொடக்கம்

  டேவிட்   | Last Modified : 21 Oct, 2018 07:54 am
8-players-women-tennis-begins-today

முன்னணி 8 வீராங்கனைகள் கலந்து கொள்ளும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்குகிறது.
 
ஆண்டின் இறுதியில், தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டி கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு நிகராக கருதப்படுவதால் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது. இதன்படி 48-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 28-ந்தேதிவரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. 

இதில் களம் காணும் வீராங்கனைகள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ‘ரெட்’ பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), நவோமி ஒசாகா (ஜப்பான்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), பெட்ரா கிவிடோவா, கரோலினா பிளிஸ்கோவா (இருவரும் செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

 

ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.51 கோடியாகும். 

தொடக்க நாளான இன்று, கிவிடோவா-ஸ்விடோலினா மற்றும் வோஸ்னியாக்கி-பிளிஸ்கோவா (மாலை 5 மணி) ஆகியோர் மோதுகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close