உலக டென்னிஸ் - அரையிறுதியில் கரோலினா 

  டேவிட்   | Last Modified : 25 Oct, 2018 07:29 pm
karolina-pliskova-wta-semi-finals

சிங்கப்பூரில் எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வரும், உலக டென்னிஸ் தொடரில் கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பெண்களுக்கான டென்னிஸ் அசோசியேசன் சார்பில் உலக டென்னிஸ் தொடர்  சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் விளையாடி வருகின்றனர். 8 வீராங்கனைகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணியில் நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு பேர் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். ஒயிட்  பிரிவில் இடம்பிடித்துள்ள கரோலினா பிளிஸ்கோவா, பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close