மகளிர் டென்னிஸ்:  ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

  டேவிட்   | Last Modified : 26 Oct, 2018 02:30 pm
women-s-tennis-at-singapore-svitolina-entered-semi-finals

எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று வரும் உலக பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

சிங்கப்பூரில், டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் செக் குடியரின் கரோலினா பிளிஸ்கோவா , சக நாட்டவர் பெட்ரா கிவிடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை சாய்த்து 3-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் பிளிஸ்கோவாவும் அரையிறுதியை உறுதி செய்தார். வோஸ்னியாக்கி வெளியேறினார்.

‘ரெட்’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஜப்பானின் ஒசாகா, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் உடனும், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடனும் மோதுகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close