உலக மகளிர் டென்னிஸ்:  உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா வெற்றி !

  டேவிட்   | Last Modified : 29 Oct, 2018 02:17 pm
wta-finals-ukraine-s-svitolina-won-the-title

எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற உலக பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில், டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதினர்.

முதல் சுற்றில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ஸ்விடோலினா இரண்டாவது சுற்றில் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்ஸை மிக எளிதாக வீழ்த்தினார். இதனால் இருவரும் சம நிலையில் இருந்தனர். அதன் பின்னர் வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும், ஸ்விடோலினா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். 

 

 

இறுதியில் 3-6, 6-2, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸை வீழ்த்தி, உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா உலக மகளிர் டென்னிஸ் போட்டியின் கோப்பையைக் கைப்பற்றினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close