நம்பர் 1 இடத்தை இழக்கிறார் நடால்!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 07:40 am
nadal-to-lose-no-1-spot-after-missing-paris-masters

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சர்வதேச நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், அடுத்து நடைபெறவுள்ள பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாடப் போவதில்லை என்பதால், தனது முதலிடத்தை இழக்க இருக்கிறார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி, ஆடவர் டென்னிஸில் முதலிடத்தில் உள்ளார் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால். அடுத்ததாக பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாடி தனது ஆதிக்கத்தை மேம்படுத்த இருந்த நடால் திடீரென தொடரில் இருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில், உலகின் 27ம் நம்பர் வீரரான பெர்னாண்டோ வெர்டாஸ்கோவுடன் நடால் மோதவிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். 

"கடந்த சில நாட்களாக நான் நலமாக இருக்கிறேன். ஆனால், வயிற்று வலி இருப்பதால் போட்டியில் விளையாட வேண்டாம் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்" என்றார் நடால். நடால் விளையாடாததால், வரும் திங்களன்று, செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறுவார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close