ஜோகோவிச்சை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார் கரேன் கச்சனோவ்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 10:44 am
paris-masters-final-karen-khachanov-beats-novak-djokovic

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 2ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை 22 வயதாகும் ரஷியாவின் கரேன் கச்சனோவ் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 2ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், தரநிலைப் பெறாத ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

கச்சனோவ் அரையிறுதியில் 6ம் நிலை வீரரான தியேம்மையும், காலிறுதியில் 4ம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரேவையும் வீழ்த்தியிருந்தார். ஜோகோவிச் அரையிறுதியில் 3ம் நிலை வீரரான பெடரரையும், காலிறுதியில் 5ம் நிலை வீரரான மரின் சிலிச்சையும் வீழ்த்தியிருந்தார்.

 

 

தரநிலை பெறாத வீரர் என்பதால் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சிற்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கசச்சனோவ் விளையாடினார். முதல் செட்டை 7-5 எனவும், 2வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச்சை வீழ்த்தி முதன்முறையாக மாஸ்டர்ஸ் பட்டத்தைழ வென்றார்.  கரேன் கச்சனோவைக்கு வெறும் 22 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close