உலக டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தில் ஜோகோவிச் 

  டேவிட்   | Last Modified : 06 Nov, 2018 10:09 am

novak-djokovic-s-orchestrates-impressive-return-to-world-no-1

உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் 8,045 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதில் இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் 8,045 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7,480 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,020 புள்ளிகள்), அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (5,300 புள்ளிகள்) ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே (5,085 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (4,310 புள்ளிகள்), குரோஷியா மரின் சிலிச் (4,050 புள்ளிகள்), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (3,895 புள்ளிகள்) ஆகியோர் முறையே 3 முதல் 8 இடங்களில் உள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.