சர்வதேச அளவில் 50-வது இடத்திற்குள் வர வேண்டும்: சென்னையின் டென்னிஸ் வீரர் ப்ரஜ்னேஷ் கன்னேஸ்வரன்

  Newstm Desk   | Last Modified : 25 Dec, 2018 05:32 am
india-s-no-1-tennis-player-chennai-s-prajnesh-eyes-top-50

ஆடவர் டென்னிஸில் இந்தியாவின் நம்பர் 1 வீரர், தமிழகத்தை சேர்ந்த ப்ரஜ்னேஷ் கன்னேஸ்வரன், சர்வதேச தரவரிசை பட்டியலில் 108வது இடத்தை பிடித்துள்ள நிலையில், 50வது இடத்திற்குள் வரவேண்டும் என்பதே தன் இலக்கு என கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இந்திய டென்னிஸ் வீரர் ப்ரஜ்னேஷ் கன்னேஸ்வரன், இந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடி, தரவரிசை பட்டியலில், தனது வாழ்நாளிலேயே சிறந்த இடமான 108வது இடத்தை பிடித்தார். இந்த ஆண்டு தனக்கு சிறப்பாக அமைந்ததாகவும், அடுத்து 50வது இடத்திற்குள் நுழைவதே தனது இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, "2018 எனக்கு மிக சிறப்பான ஆண்டு. 108வது இடத்தை பிடித்துள்ளேன். இதை அடுத்த ஆண்டும் தொடர்ந்து, 100வது இடத்திற்குள் நுழைய வேண்டும். என்னை பொறுத்தவரை, 100வது இடத்திற்குள் வருவது திருப்திகரமாக அமையும். ஆனால், தரவரிசை பட்டியல் மட்டுமல்லாமல், டூர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்புகிறேன். இறுதியில், என்னுடைய இலக்கு, 50வது இடத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்பதேயாகும்" என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close