மகாராஷ்டிரா ஓபன்: பயஸ் இணையை வீழ்த்திய போபண்ணா இணை

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 08:47 am

maharahtra-open-bopanna-sharan-beat-paes-and-partner

புனே நகரில் நடந்து வரும் மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ், மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் இணையை இந்தியாவின் போபண்ணா -திவிஜ் சரண்  இணை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா -திவிஜ் சரண் ஜோடி 6-7 (4-7), 6-4, 17-15 என்ற செட் கணக்கில் லியாண்டர் பயஸ், மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ்  இணையை வெளியேற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதே போல ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ஜாமி முனாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் மாலெக் ஜாஸிரியை (துனிசியா) விரட்டியடித்தார். குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் தன்னை எதிர்த்த எர்னஸ்ட்ஸ் குல்பிசை (லாத்வியா) 7-6 (5), 7-6 (5) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7-6 (6) 6-7 (5), 3-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஜாஸிரியிடம் வீழ்ந்தார். ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close