சரித்திர சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்?

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 06:26 pm

serena-williams-nearing-grand-slam-record

சர்வதேச டென்னிஸ் நாயகியான செரீனா வில்லியம்ஸ், சிறிய இடைவேளைக்கு பிறகு, ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடும் நிலையில், மகளிர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் சரித்திர சாதனையை சமன் செய்ய தயாராகி வருகிறார். 

உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பார்க்கப்படுகிறார் செரீனா வில்லியம்ஸ். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, மகளிர் ஒற்றையர் பிரிவில் சரித்திர சாதனை படைத்த மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றபோது, ஸ்டெக்பி கிராபின் (22 பட்டங்கள்) சாதனையை செரீனா முறியடித்தார். 

37 வயதான வில்லியம்ஸ், கடைசியாக செப்டம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஓபன் தொடரின் இறுதி போட்டியில், சர்ச்சைக்குரிய முறையில் நடுவரிடம் சண்டையிட்டு வெளியேறினார். அதன் பிறகு, தற்போது தான் டென்னிஸ் களத்திற்கு வில்லியம்ஸ் திரும்பியுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் 16வது இடத்தில செரீனா இருந்தாலும், மற்ற டாப் வீராங்கனைகள் அவரை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்றே தெரிவித்துள்ளர். "இதுபோன்ற தரவரிசையை வைத்து செரீனாவை ஒதுக்கிவிட முடியாது. இந்த தொடரில் அவர் மிக பலமாக களமிறங்குவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார் அமெரிக்க ஓபன் சாம்பியன் ஒசாகா.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.