ரோஜர் ஃபெடரருக்கு நேர்ந்த அவமானம்!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 05:28 pm
roger-federer-forgets-accreditation-pass-denied-entry-into-australian-open-locker-room

தனது அடையாள அட்டையை மறந்துவைத்துவிட்டு வந்த காரணத்தால், பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர், உடைமாற்றும் அறைக்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பங்கேற்றுள்ள பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர், தனது அடையாள அட்டையை இன்று எடுத்துச் செல்ல மறுந்துவிட்டதாக தெரிகிறது.

மைதான வளாகத்தில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள உடை மாற்றும் அறைக்கு அவர் சென்றபோது, அங்கிருந்த பாதுகாவலர் ஃபெடரரிடம் அடையாள அட்டையை கேட்டிருக்கிறார். அவர் இல்லையென சொல்லவே, விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றுதான் எனக் கூறி, ஃபெடரரை பாதுகாவலர்,  அறைக்கு வெளியே கால்கடுக்க நிறுத்தி வைத்துள்ளார்.

தகவலறிந்து அங்கு வந்த அவரது பயிற்சியாளர், தமது அடையாள அட்டையை காண்பித்து, இவர் என்னிடம் பயிற்சி பெறும் ரோஜர் ஃபெடரர் தான் என சொன்னதையடுத்து, அவர் உடைமாற்றும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.

ஃபெடரர் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என பல்வேறு போட்டிகளில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close