ஃபெடரர், ஷரபோவா, கெர்பர் ஆஸ்திரேலிய ஒபனில் இருந்து நாக் அவுட்!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 05:38 am
federer-sharapova-kerber-knocked-out-of-australian-open

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில், நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனைகள் மரியா ஷரபோவா மற்றும் கெர்பர் ஆகியோர், அதிர்ச்சி தோல்வியடைந்து நாக் அவுட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஃபேல் நடால், தாமஸ் பெரிடிக்கை நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை, 20 வயதேயான ஸ்டெபானோஸ் ஸீட்சிபாஸ், 6(11)-7(13), 7-6, 7-5, 7-6 என்ற போராடி வீழ்த்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே போல, பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அமெரிக்க வீராங்கனை டேனியல்லா காலின்ஸ், ஜெர்மன் வீராங்கனை கெர்பரை 6-0,6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி, நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவாவை 4-6, 6-1, 6-4 என போராடி வீழ்த்தினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close