டேவிஸ் கோப்பை: நாக் அவுட் ஆகும் நிலையில் இந்தியா

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 08:04 pm
india-on-the-brink-of-elimination-in-davis-cup

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்று போட்டிகளில், முன்னாள் சாம்பியனான இத்தாலியுடன் மோதி வரும் இந்தியா, 2-0 என நாக் அவுட்டாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில், இத்தாலியுடன் இந்தியா மொதி வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில், இத்தாலியின் ஆண்ட்ரியாஸ் செப்பி, இந்தியாவின் சிறந்த ஆடவர் வீரரான ராம்குமார் ராமநாதனை 6-4, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக வீழ்த்தினார்.

இரண்டாவது போட்டியில், இத்தாலியின் மாட்டேயோ பெர்ரேட்டினி, இந்தியாவின் பிரஜனேஷ் கணேஸ்வரன்னை 6-4, 6-3 என அபாரமாக வீழ்த்தினார். 2-0 என பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணியின் ரோகன் போபண்ணா மற்றும் டிவிஜ் சரண் ஆகியோர் கலந்துகொள்ளும் இரட்டையர் போட்டியில், கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் இந்தியா உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close