தெலங்கானா தூதர் பதவியிலிருந்து சானியா மிர்சாவை நீக்குங்கள்: பாஜக எம்எல்ஏ

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 04:07 pm
remove-sania-mirza-from-telangana-ambassador-post-bjp-mla

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை மணந்த சானியா மிர்சாவை தெலங்கனா தூதர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், என பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில், 49 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, அம்மாநிலத்தின் தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், என பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

"பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரை மணந்த சானியா மிர்சா, தெலங்கனாவின் தூதராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறிய பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங், அவரை நீக்க வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவை வலியுறுத்தினார். சானியாவை நீக்குவது, தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதாக இருக்கும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close