100-ஆவது பட்டத்தை வென்றார் ரோஜர் பெடரர்!

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 09:12 am
roger-federer-claims-100th-title

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டித் தொடரில் பட்டம் வென்றதன் மூலம், சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீரர் ரோஜர் பெடரர் சர்வதேச போட்டியில் 100-வது பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் துபாயில் நடந்தது. இதில் நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 7-ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 11-ஆம் நிலை வீரரான கிரீசின் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெடரர் 6 -4, 6 -4 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் 4வது சுற்றில் சிட்சிபாசிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டார்.

துபாய் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெடரர் வெல்வது இது 8வது முறையாகும். அவருக்கு ரூ.4 கோடியும், 2வது இடத்தை பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரருக்கு, ஒற்றையர் பிரிவில் இது 100-ஆவது சர்வதேச பட்டமாகும். இதில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் அடங்கும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close