ரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் தியம்!

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 04:48 pm
thiem-beats-federer-to-win-indian-wells

ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த டொமினிக் தியம், இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி தனது முதல் 'மாஸ்டர்ஸ் 1000' பட்டத்தை வென்றார்.

17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்ளை வென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த தியமுடன் மோதினார். சிறப்பாக விளையாடிய பெடரர் முதல் செட்டை கைப்பற்றினாலும், அடுத்த இரண்டு செட்களை போராடி வென்று 3-6, 6-3, 7-5 என பட்டத்தை வென்றார் தியம். இது அவர் வெல்லும் முதல் மாஸ்டர்ஸ் 1000 பட்டமாகும். 

6வது முறையாக இந்தியன் வெல்ஸ் பட்டத்தை வென்று பெடரர்  சாதனை படைக்க இருந்த நிலையில், அதை தியம் தடுத்துள்ளார். இதற்கு முன் 4 முறை இருவரும் நேருக்கு நேர் மோதியிருந்த நிலையில், 2-2 என வெற்றி பெற்று சமமாக இருந்தனர். தற்போது தியம் 3-2 என பெடரருக்கு எதிராக முன்னிலை பெற்றுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close