கஜகஸ்தானில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி

  அனிதா   | Last Modified : 19 Nov, 2019 12:37 pm
davis-cup-tennis-tournament-in-kazakhstan

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டி கஜகஸ்தானில் நடைபெறுகிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 29, 30 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால் போட்டி நடைபெறும் இடத்தை மாற்றக்கோரி இந்திய டென்னிஸ் சங்கம் வலியுறுத்தியது. இதையடுத்து போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்திருந்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் எனவே போட்டியை இஸ்லாமாபத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில்,  நவ.29, 30 ஆகிய தேதிகளில் கஜகஸ்தான் தலைநகரான நூர்சுல்தானில் டேவிஸ் கோப்பை போட்டி நடைபெறும் என இந்திய  டென்னிஸ் கூட்டமைப்பின் பொதுச்செயலார் ஹிரன்மோய் சாட்டர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close