ராமர் பாலத்தில் புதிய ஆய்வு நடத்த முடிவு

  mayuran   | Last Modified : 24 Mar, 2017 10:16 pm
இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்திற்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் குறித்து, ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இந்திய தொல்பொருள் துறையின் முன்னாள் இயக்குநரான அலோக் திரிபாதி தலைமையில், வரும் அக்டோபர் மாதம், இந்த மணல் திட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்டதா இல்லை இயற்கையாகவே உருவானதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2007ஆம் ஆண்டு மத்திய அரசு, புவியியல் வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ததில் ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது. இந்நிலையில் தொல்லியல் துறையால் முதன் முறையாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close